Popular Posts

Tuesday, February 7, 2012

வரலாறு என்பது "நம்பிக்கைகளின் கொள்கையே"

தந்தை பெரியார் ஹாலில் நடைபெற்ற கலாசார பிரிவு அரங்கில் நடைபெற்ற கட்டுரை சமர்ப்பிப்பில் கலந்து கொண்டோம் அங்கே பெங்களுரு பல்கலைகழக வரலாற்று துறை இணை பேராசிரியர் திருமதி எம் வீ உஷா தேவி அவர்களை சந்தித்தேன் அவர் நம்மிடம் , தன்னை   பற்றி பகிர்ந்து கொண்டதிலிருந்து;

பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு தான். பெற்றோர்கள் படிப்பறிவற்றவர் கள். ஆனாலும் நான் படிப்பதை பெருதும் விரும்பினர். தற்பொழுது பெங்களூரு பல்கலைகழக  வரலாற்று துறையில் பணியாற்றிவருகிறேன். பெங்களூருவை சேர்ந்த பெண் கல்வியாளர்களில்   எனக்கு ஒரு சிறப்பு உண்டு .அது என்ன வென்றால் " நான் தான் கர்நாடகாவில்  பல்கலைகழக மானிய  குழுவில் ஜே. ஆர். எப் உதவி தொகை பெற்ற முதல்பெண்.

என் ஆய்விற்கான தலைப்பு "நவீன இந்தியாவில் சமூக பொருளாதார வரலாறு". ஏன் இந்த ஆய்வு மேற்கொள்கிறேன் என்றால் இந்தியாவில் ஏராளமான சமுதாய பிரச்சனைகள் நிலவுகின்றன. அவற்றில் முதன்மையானது 'வறுமை'. இந்தியா அடிமை பட்ட காலத்தில் வறுமை பெருகி மக்கள் துன்புற்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்த பின்னரும் அந்நிலை மாறவில்லை . பசுமை புரட்சி ஓரளவிற்கு வறுமையை போக்கினாலும். அது மக்களின் உணவு  தேவையை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதனை விளக்கும் வகையிற் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 எனது ஆய்வின் வாயிலாக  வறுமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனை களை போக்குவதற்கு சில  வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளேன். அவை, தொலைநோக்கு பார்வையுடன் கொள்கைகளை உருவாக்குதல். திட்டமிடும் வேளையில் முன்னெச்செரிக்கை உடன் முடிவுகள் எடுத்தல், சீர்படுத்த வல்ல மதிப்பீட்டு  முறைகளை கையாளுதல், நடைமுறையில் உள்ள சிறந்த அறிவியல் தொழில் நுட்ப உக்திகளை கையாளுதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை  உருவாக்குதல் முதலியவற்றின் வாயிலாக இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

நான் இந்தளவிற்கு ஆராய்ச்சித்துறையில் சிறந்து பணியாற்ற காரணம் எனது 'கைடாக' இருந்த முனைவர் சந்திரசேகர் மற்றும் முனைவர் வீ . ராதப்பன் அவர்களே ஆவர். அவர்கள் பெங்களூரு பல்கலைகழக பேராசிரியர்களாக பணியாற்றிவர்கள்.

 இன்று, வரலாறு திரிக்கப்படுகிறது என்று கடுமையான விமர்சனம் எழுகிறது. உண்மையில் வரலாறு என்பது நம்பிக்கைகளின் வெளிப்பாடுகள் தான். அந்நம்பிக்கை மேன்மை  உடயதாகவோ, கீழ்மை உடயதாகவோ இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.  அதனால் வரலாறு என்பது "நம்பிக்கைகளின் கொள்கையே"

No comments:

Post a Comment